X

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டி – இந்தியா தோல்வி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் இருவரும் சதத்தை நோக்கிச் சென்றனர். ஆனால் 193 ரன்னில் அவுட்டானார். அடுத்து கவாஜாவுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். அபாரமாக ஆடிய கவாஜா 104 ரன்னில் ஆட்டமிழந்தார்

அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா புயல் வேகத்தில் பீல்டிங் செய்து பந்தை டோனியிடம் வீசி, டோனி அற்புதமான வகையில் ரன்அவுட் ஆக்கினார்.

அதன்பின் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் வேகத்தில் மந்தநிலை ஏற்பட்டது. இறுதியில், ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 314 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

தவான் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 14 ரன்னிலும், அம்பதி ராயுடு 2 ரன்னிலும் வெளியேறினர். இதனால் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்தது.

ஒருபுறம் கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆடினார். அவருக்கு எம்.எஸ் டோனி ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி அரை சதத்தை கடந்தது. 26 ரன்கள் எடுத்த டோனி ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து கேதார் ஜாதவ் இறங்கினார். ஒன்று, இரண்டு என ரன்களை சேர்க்க இந்த ஜோடியும் அரை சதத்தை கடந்தது. கேதார் ஜாதவ் 26 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விஜய் சங்கர் கோலிக்கு ஓரளவு ஒத்துழைப்பு அளித்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்பாக ஆடிய விராட் கோலி தனது 41-வது சதத்தைப் பதிவு செய்தார். அடுத்து அதிரடியாக ஆடினார். இதனால் 123 ரன்னில் கோலி அவுட்டானார். அவருக்கு அடுத்து விஜய் சங்கர் 32 ரன்னில் வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா தாக்குப்பிடித்தார். அவர் 24 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் இந்தியா 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சார்பில் சம்பா, ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 2-1 என தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.