X

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி – இந்தியா பந்துவீச்சு தேர்வு

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில், அம்பத்தி ராயுடு, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர், கேதர் ஜாதவ், சேஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்:

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்) கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகம்மது சமி, யுஸ்வேந்திர சாஹல்

ஆஸ்திரேலியா: அலெக்ஸ் காரி (விக்கெட் கீப்பர்) ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா,

கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.