X

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்! – விஜய் சங்கர், சுப்மான் கில் இந்திய அணியில் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் இருவரும் நாடு திரும்பினர்.

இந்நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு வீரர்களுக்கு பதில், தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கரும், சுப்மான் கில்லும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த ரஞ்சி போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் சங்கர் ஏற்கனவே, இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் பங்கேற்றுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விஜய் சங்கர் (வயது 27), ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ள விஜய் சங்கரும், சுப்மான் கில்லும் ஆஸ்திரேலிய தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.