ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்! – ஆஸ்திரேலியா புறப்பட்டார் டோனி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலை அடைந்தது. இன்றுடன் முடிவடைந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 12-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத சில வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர். ரோகித் சர்மா தனது குழந்தையை பார்ப்பதற்காக இந்தியா வந்தார்.

எம்எஸ் டோனி, கேதர் ஜாதவ், கலீல் அகமது ஆகியோர் உள்பட ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்தவர்கள். இவர்கள் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார்கள். கேதர் ஜாதவ் தனது டுவிட்டர் பக்கத்திலும், கலீல் அகமது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புறப்படும்போது எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), 3. கேல் எல் ராகுல், 4. ஷிகர் தவான், 5. அம்பதி ராயுடு, 6. தினேஷ் கார்த்திக், 7. கேதர் ஜாதவ், 8. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 9. ஹர்திக் பாண்டியா, 10. குல்தீப் யாதவ், 11. சாஹல், 12. ஜடேஜா, 13. புவனேஸ்வர் குமார், 14. பும்ரா, 15. கலீல் அகமது, 16. முகமது ஷமி.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools