ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. செப்டம்பர் 19-ந்தேதி முதல் கடந்த நவம்பர் 10-ந்தேதி வரை (கடந்த திங்கட்கிழமை) நடைபெற்றது. இறுதிப் போட்டி முடிந்த நிலையில் 11-ந்தேதி துபாயில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டனர்.

ஒயிட் பால் கிரிக்கெட் அணி மற்றும் டெஸ்ட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் என 25 பேர் நேற்று ஆஸ்திரேலியா சென்றடைந்தனர்.

சிட்னி சென்றடைந்ததும் இந்திய அணி வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைனை தொடங்கியுள்ளனர். 14 நாட்கள் தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. தனிமையில் இருக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் கோரன்டைனில் சரியான துணை என டுவிட்டரில் பதிவிட்டு, நானேதான் கம்பெனி எனத் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools