X

ஆஸ்திரேலியவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – இங்கிலாந்து வீரர் ஒல்லி ஸ்டோன் விலகல்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தால் வெளியேறினார். இதனால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 14-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். நான்காவது அல்லது ஐந்தாவது டெஸ்டிற்குதான் உடற்தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஒல்லி ஸ்டோன் முதுகு வலிக் காரணமாக தற்போது லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவர் இரண்டு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: sports news