ஆஸ்கார் விழா மேடையில் ஆடைகளின்றி வந்த ஜான் சீனா
96-வது ஆஸ்கர் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. அப்போது சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிப்பதற்காக WWE நட்சத்திர வீரரான ஜான் சீனா ஆடைகளின்றி மேடைக்கு வந்தார்.
அவர் விருதை அறிவித்த பிறகு, ஆஸ்கர் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் என்பவர் திரைக்காக வைக்கப்பட்டிருந்த துணியை எடுத்து ஜான் சீனாக்கு அணிவித்தார். WWE நட்சத்திர வீரரான ஜான் சீனா ஆடைகளின்றி மேடைக்கு வந்ததால் அங்கிருந்த பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஓப்பன்ஹெய்மர் சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட நான்கு விருதுகளை வென்றது. அதேபோல் சிறந்த நடிகர் விருதையும் வென்றது. அந்தப் படத்தில் நடித்துள்ள சிலியான் முர்பி (Cillian Murphy) இந்த நடிகர் விருதை பெற்றார்.
சிறந்த இயக்குனர் விருதையும் ஓப்பன் ஹெய்மர் வென்றது. அந்த படத்தினர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார். சிறந்த படம் விருதையும் வென்றுள்ளது. மொத்தமாக ஏழு விருதுகளை வென்று அசத்தியுள்ளது.