X

ஆஸ்கார் விருது பெற்ற படங்கள் விபரம்!

ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. காலை சுமார் 7 மணியளவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி விழா துவங்கியது.

இதில் போகிமியான் ராஃப்சோடி படம் அதிகபட்சமாக சிறந்த நடிகர் உட்பட நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பிளாக் பேந்தர், ரோமா படங்கள் தலா 3 ஆஸ்கர் விருதுகளை வென்றன. கிரீன் புக் உள்ளிட்ட படங்கள் தலா 2 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளன.

ஆஸ்கார் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

சிறந்த படம் – கிரீன் புக்

சிறந்த இயக்குநர் – அல்போன்சோ குவாரோன் (ரோமா)

சிறந்த நடிகர் – ரமி மாலக் (போகிமியான் ராஃப்சோடி)

சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மேன் (த ஃபேவரைட்)

சிறந்த ஆவணப்படம் – எலிசபெத் சாய் வசர்ஹெலி, ஜிம்மி சின், இவான் ஹேஸ் மற்றும் ஷானன் டில் (ப்ரீ சோலோ)

சிறந்த வெளிநாட்டு படம் – ரோமா (மெக்ஸிகோ)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஸ்பைடர் மேன் – இன்டூ த ஸ்பைடர் வெர்ஸ்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – பாவ்

சிறந்த ஆவண குறும்படம் – பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – ஸ்கின்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஃபர்ஸ்ட் மேன்

சிறந்த ஒளிப்பதிவாளர் – அல்போன்சோ குவாரோன் (ரோமா)

சிறந்த படத்தொகுப்பாளர் – ஜான் ஓட்மேன் (போகிமியான் ராஃப்சோடி)

சிறந்த திரைக்கதை – நிக் வல்லலோங்கா, பிரெயன் கியூரி, பீட்டர் ஃபேரலி (கிரீன் புக்)

தழுவல் திரைக்கதை – சார்லி வச்டெல், டேவிட் ரேபினோவிட்ஸ், கெவின் வில்மோட் மற்றும் ஸ்பைக் லீ (பிளாக்கிளான்ஸ்மேன்)

சிறந்த பின்னணி இசை – லட்விக் கோரன்சான் (பிளாக் பேந்தர்)

சிறந்த பாடல் – ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)

சிறந்த துணை நடிகர் – மஹர்ஷலா அலி (கிரீன் புக்)

சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங் (இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக்)

சிறந்த ஒப்பனை – கிரேக் கேனம், கேட் பிஸ்கோ மற்றும் பேட்ரிசியா டெஹானி (வைஸ்)

ஆடை வடிவமைப்பு – ரூத் கார்டர் (பிளாக் பேந்தர்)

தயாரிப்பு வடிவமைப்பு – ஹன்னா பீச்லெர் (பிளாக் பேந்தர்)

சிறந்த ஒலி படத்தொகுப்பு – ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோன் (போகிமியான் ராஃப்சோடி)

ஒலி கோர்ப்பு – பால் மேஸ்சி, டிம் கேவஜின், ஜான் கேசலி (போகிமியான் ராஃப்சோடி)