Tamilசினிமா

ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு இதற்கு முன்பே நடைபெற்ற நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது.

இதில் இந்திய சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக – நாட்டு நாட்டு – கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தியா சார்பில் ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “வாழ்த்துக்கள் கீரவாணி மற்றும் சந்திர போஸ் ஏற்கனவே கணிக்கப்பட்ட மற்றும் தகுதியானது. உங்கள் இருவருக்கும் மற்றும் ஆர்.ஆர்.ஆர் குழுவிற்கும் ஜெய்ஹோ!! என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், வாழ்த்துக்கள், இந்திய இயக்குனர்களுக்கு நீங்கள் ஒரு மடையை திறந்து ஊக்கப்படுத்தியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதை (சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடல்) வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.