X

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு – ஆளுநர் கண்டனம்

ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: tamil news