ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்றுள்ள அவர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்தார். என்றபோதிலும் கவர்னர் உரை அப்படியே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அவர் பேசிய சில கருத்துகள் நீக்கப்பட்டன. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி சென்றுள்ளார்.