Tamilசெய்திகள்

ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

ஒடிசா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.