Tamilவிளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் – பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

 

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை சயாகா தகஹாஷியை எதிர்கொண்டார்

பரபரப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.

முன்னதாக மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியிடம் 14-21, 21-17, 17-21 என்ற செட்கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.