X

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் – முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இந்தத்தொடரில் 4-ம் தரவரிசை பெற்றிருந்தார். இவர் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் தென்கொரியாவின் சுங் ஜி ஹியுன்-ஐ எதிர்கொண்டார்.

பிவி சிந்துவுக்கு எதிராக சுங் ஜி ஹியுன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல்செட்டை பிவி சிந்து 16-21 என இழந்தார். சுதாரித்துக் கொண்ட பிவி சிந்து 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிவி சிந்து ஆட்டத்திற்கு சுங் ஜி ஹியுனும் பதிலடி கொடுத்தார். என்றாலும் கடும் போராட்டத்திற்குப்பின் பிவி சிந்து 22-20 என போராடி கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டும் இழுபறியாக சென்றது. இறுதியில் பிவி சிந்து 18-21 என அந்த செட்டை இழந்து முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறினார்.