ஆலியா பட் படத்திற்கு கங்குபாய் குடும்பத்தார் எதிர்ப்பு!

உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ‘கங்குபாய் கத்யாவாடி’ படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் 1960களில் மும்பையிலுள்ள காமாட்டி புரத்தில் வாழ்ந்த பெண் தாதா கங்குமாய் பற்றிய கதை. காதலனால் கைவிடப்பட்ட பெண், ஒரு தாதாவின் தன் தங்கையாக பாலியல் தொழில் செய்யும் பகுதியில் வாழ்கிறார். பின்னாளில் அவரே அண்ணன் தாதாவின் இடத்திற்குக் கொண்டுவரப்படுகிறார், இதுவே கதை. ஆனால் படத்தில் கங்குமாய் விபச்சாரம் செய்வது போலக் காட்டியிருப்பதாகக் கூறி கங்குமாயின் வளர்ப்பு மகன் பாபு ராவ்ஜி ஷா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது இந்தப் படத்தில் என் அம்மா ஒரு விலைமகளாக மாற்றப்பட்டுள்ளார். ஆனால், மக்கள் இப்போது என் அம்மாவைப் பற்றிப் புகழ்ந்து பேசும் விஷயங்களைச் சொல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குபாயின் குடும்ப வழக்கறிஞர் நரேந்திரன் கூறுகையில், “ டிரைலர் வெளியானதிலிருந்தே ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். கங்குபாய் சித்தரிக்கப்பட்ட விதம் முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது, இது கொச்சையானது. ஒரு சமூக ஆர்வலரை விலைமகளாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எந்தக் குடும்பம் அதை விரும்பும்? படத்தில் கங்குபாயை மாஃபியாவாக ஆக்கிவிட்டார்கள் என்று கவலை தெரிவித்திருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools