ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு நேற்று அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை சுட்டிக்காட்டி ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

டாக்டர்கள் ஆஜராகவதில் இருந்து விலக்கு கோருவது தொடர்பாக இன்று பிற்பகல் அப்போலோ நிர்வாகம் விளக்கம் தர வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools