Tamilசினிமா

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘வீட்ல விஷேசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220
கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். ‘வீட்ல விசேஷங்க’ என்ற பெயரிடப்பட்ட இப்படத்தை அவரே இயக்குகிறார். இதில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி
ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், ரிலீஸ் தேதியையும் படக்குழு
அறிவித்துள்ளது.

அதன்படி, ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.