Tamilவிளையாட்டு

ஆர்.சி.பி கண்ணியம் தவறிவிட்டது – மைக்கேல் வாகன் விமர்சனம்

ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மழை பெய்து ஆட்டம் நின்றுவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. எப்படியாவது சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என கோடிகணக்கான ரசிகர்களில் பிரார்தனை வீணாகியது.

ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்காக மைதானத்தில் நின்று கொண்டு இருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆர்சிபி அணி கைக் கொடுக்க வரவில்லை அவர்கள் போட்டியை வென்ற சந்தோஷத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்தனர் அதனால் டோனி கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுக் குறித்து பலரும் பல கருத்துகளையும் விவாதங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

இது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான வாகன் “தோனியின் கடைசி போட்டியா இது இருக்கலாம் என்ற சூழலில், போட்டி முடிந்தவுடன் “லெஜெண்ட் அங்கே இருக்கிறார். முதலில் அவரிடம் சென்று நாம் கை கொடுக்க வேண்டும்” என்று ஆர்சிபி வீரர்கள் மனதில் தோன்றிருக்கவேண்டும். கை கொடுத்து மரியாதை செய்த பின்னர் கொண்டாட்டங்களை தொடர்ந்து இருக்கலாம். டோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என ஆர்சிபி வீரர்கள் வருந்துவார்கள். என கூறியுள்ளார்.