ஆரி நடிக்கும் புதிய படம் ‘ரிலீஸ்’ பூஜையுடன் தொடங்கியது

மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிக்க, இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. ரிலீஸ் என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.

சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாக இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜெ லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools