X

ஆரவை வைத்து படம் இயக்கும் சரண்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் தற்போது `ராஜ பீமா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், ஆரவ் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம், சரண் இயக்க, கமல் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை நினைவுகூறும் விதமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சிமோன் கே.கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு கே.வி.குஹான் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இவர் சரணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.