பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா பிசியான நடிகையாகி விட்டார். பிக்பாசில் அவர் காதலித்து பிரிந்த ஆரவ்வுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
ஆரவ் பற்றி கேட்டதற்கு ஒரு பேட்டியில் ‘அவரும் நானும் நல்ல புரிதலில் இருக்கிறோம். எனக்காக இவர் இருக்கிறார் என்று ஆரவ்வை சொல்லலாம். நாங்கள் லிவிங் டு கெதரில் இல்லை. சிலர் எங்களை பற்றி தவறாக எழுதுகிறார்கள். அதை கவனிக்க எங்களுக்கு நேரம் இல்லை. இருவருமே படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை’ என்று கூறி இருக்கிறார்.
ஓவியா நடிப்பில் அடுத்ததாக காஞ்சனா 3, 90 எம்.எல்., உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன.
![AddThis Website Tools](https://cache.addthiscdn.com/icons/v3/thumbs/32x32/addthis.png)