வடகிழக்கு பருவமழை கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் நாட்களில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
சென்னையில் எழும்பூர், சைதாப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
விடுமுறை தினமான இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் மேலும் 3 நாளைக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.