‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்திற்காக நானும் காத்துக்கொண்டிருக்கிறேன் – ஜிவி பிரகாஷ் குமார்

12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷிடம் செய்தியாளர்கள் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து கேள்வி எழுப்பினர். இதையும் படியுங்கள்:

இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் குமார், ‘ஆயிரத்தில் ஒருவன்-2 படம் பற்றி பேசியிருக்கிறார்கள். தனுஷ் சார் பண்ற மாதிரி சொல்லியிருக்காங்க. படம் பெரிய பட்ஜெட், பெரிய புரொஜக்ட், நடந்துச்சுனா எனக்கு சந்தோஷம் தான். நானும் உங்கள மாதிரி தான் ரொம்ப எதிர்பார்ப்போட வெயிட் பண்ணிட்டு இருக்கேன்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools