ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம்!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம்.
2.12.2019 முதல் 8.1.2020 வரை தமிழகம் முழுவதும் வாகன சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு 22,295 வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரியாக ரூ.8.33 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் சிரமமின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள ஆம்னி பஸ்களில் ஆய்வு மேற்கொள்ள சிறப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.