X

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் நிகழ்த்திய சாதனைகள்!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்தார். அதோடு இக்கட்டான நிலையில் இருந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த போட்டியின் சாதனைத் துளிகள் விவரம்

1. இந்த போட்டியில் மேக்ஸ்வெல் 10 சிக்ஸ் அடித்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். மோர்கன் (17), கெய்ல் (16), மார்ட்டின் கப்தில் (11), பஹர் ஜமான் (11) ஆகியோர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.

2. ஒருநாள் போட்டியில் 2-வது அதிவேக இரட்டை சதம் இதுவாகும். இஷான் கிஷன் 126 பந்தில் அடித்துள்ளார். மேக்ஸ்வெல் நேற்று 128 பந்தில் இரட்டை சதம் அடித்தார். கெய்ல் 138 பந்தில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

3. தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்காத ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் சார்லஸ் காவென்ட்ரி 194 (நாட்அவுட்), விவ் ரிச்சர்ட்ஸ் (189 நாட்அவுட்), டு பிளிஸ்சிஸ் (185) சாதனை படைத்திருந்தனர்.

4. 7-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல்- கம்மின்ஸ் ஜோடி 202 ரன்கள் குவித்தது. இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் பட்லர்- ரஷித் ஜோடி 177 ரன்களும், ஆபிஃப் ஹொசைன்- மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி 174 (நாட்அவுட்) ரன்களும் குவித்திருந்தனர்.

5. உலகக் கோப்பையில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மார்ட்டின் கப்தில் (237 நாட்அவுட்), கெய்ல் (49), ரோகித் சர்மா (45) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

6. சேஸிங்கில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் பஹர் ஜமான் 193 ரன்கள் எடுத்துள்ளார்.

7. உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். கெய்ல் (49), ரோகித் சர்மா (45) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

8. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். வாட்சன் 185 (நாட்அவுட்), ஹெய்டன் (181 நாட்அவுட்), டேவிட் வார்னர் 179 மற்றும் 178) ரன்கள் அடித்துள்ளனர்.

9. உலகக் கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

10. ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சட்ரன் சதம் விளாசினார். இதன் மூலம் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர என்ற பெருமையை பெற்றார்.

Tags: tamil sports