Tamilவிளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 362 ரன்களுக்கு ஆல் அவுட்

வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக நஜ்முல் உசைன் ஷான்டோ டெஸ்டில் தனது 3-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மமுதுல் ஹசன் ஜாய் 76 ரன்னில் அவுட்டானார். இதனால் வங்களாதேசம் அணி முதல்நாள் முடிவில் 79 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 41 ரன்னுடனும், மெஹதி ஹசன் மிராஸ் 43 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரிலேயே மெஹதி ஹசன் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் அவுட் ஆன அடுத்த ஓவரில் முஷ்பிகுர் ரஹிம் 47 ரன்னில் வெளியேறினார். அதே ஓவரில் அடுத்து வந்த தைஜுல் இஸ்லாம் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்த வங்காள தேசம் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 382 ரன்கள் எடுத்தது.

வங்களாதேசம் அணி 362 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 20 ரன்களில் இழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் நிஜாத் மசூத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.