X

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – வெஸ்ட் இண்டீஸ் வீரர் டாரன் பிராவோ நீக்கம்

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுடன் மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே டெஸ்டில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் உத்தரகான்ட் மாநிலத்தில் உள்ள டேராடூவில் நடக்கிறது. இதற்கான வெஸ்ட்இண்டீஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெஸ்ட் அணியில் இருந்து டாரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார். காயம் அடைந்த கேப்ரியலுக்கு பதிலாக அல்ஜாரி ஜோசப் சேர்க்கப்பட்டு உள்ளார். வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணி வருமாறு:-

ஹோல்டர் (கேப்டன்), ஹோப், கேம்ப்பெல், பிராத்வெயிட், ஹெட்மயர், புரூகஸ், ரோஸ்டன் சேஸ், டவ்ரிச் சுனில் அம்பரிஸ், ஜோமல் வாரிகன், கார்ன்வெல், கேமர்ரோச், கீமோ பவுல், அல்ஜாரி ஜோசப்.

நவம்பர் 5-ந்தேதி 20 ஓவர் தொடரும், 13-ந்தேதி ஒருநாள் தொடரும் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிக்கு பொல்லார்ட் கேப்டனாக செயல்படுவார்.

Tags: sports news