ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை – பறிமுதல் செய்யப்பட்ட இசைக்கருவிகள் தீயிட்டு எரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. இதுபோல் சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசையை இசைப்பதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்கக்கேடானதாகக் கருதி, பறிமுதல் செய்யப்பட்ட இசைக்கருவிகள் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை தலிபான் தீயிட்டு எரித்தன.

இதுகுறித்து, நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் ஹெராத் துறையின் தலைவர் அஜிஸ் அல்-ரஹ்மான் அல்-முஹாஜிர் கூறுகையில், “இசையை ஊக்குவிப்பது தார்மீக ஊழலை ஏற்படுத்துகிறது மற்றும் அதை இசைப்பது இளைஞர்களை வழிதவறச் செய்யும்” என்று கூறினார்.

இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகள் மற்றும் உபகரணங்களை தலிபார் அதிகாரிகள் எதிர்த்தனர். இதில் ஒரு கிட்டார், மற்ற இரண்டு கம்பி வாத்தியங்கள், ஒரு ஹார்மோனியம் மற்றும் ஒரு தபேலா, ஒரு வகை டிரம் அத்துடன் ஒலி பெருக்கிகள் ஆகியவை இருந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news