ஆன் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை – மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு

மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ராணுவம் கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சான் சூகி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் என குறைந்தது 18 குற்றங்களுக்காக ஆங் சான் சூகி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சூகி தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆங் சான் சூகிக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்காக அவர் நிறுவிய நிறுவனமான டா கின் கீ பவுண்டேசனில் இருந்து ஒரு வீட்டைக் கட்டுவதற்கும், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை தள்ளுபடி விலையில் குத்தகைக்கு எடுத்ததற்கும், நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதாக ஆதாரங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools