Tamilசெய்திகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிகளை வகுக்க வேண்டும் – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் தடுப்பூசி முன்னுரிமை அளித்து வழங்கவேண்டும் என்றும் பள்ளிகளை காணொளி காட்சி மூலம் வழங்குவதில் இருந்து நேரடியாக வழங்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வியை எளிதில் அணுகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உடல்நலம் சரியில்லாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு தரவேண்டும். எந்தெந்த நாளில் நேரடி வகுப்பு, ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என்பதை அறிவித்து விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றமும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் பல சாதகமும், பாதகமும் உள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம். கொரோனா 3-ம் அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் என நம்பிக்கையுள்ளது, என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.