X

ஆன்மிகம் நமது மிகப் பெரிய பலம் – குடியரசுத் துணைத் தலைவர் பேச்சு

பகவத் கீதையின் போதனைகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திய ஸ்ரீல பிரபுபாதர் குறித்த புத்தக வெளியீட்டு விழா குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது:

ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய உலகளாவிய விழுமியங்களை இந்திய நாகரிகம், நிலைநிறுத்துகிறது. இந்தப் பழமையான மதிப்புகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம். சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து இந்திய இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும். சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம்.

ஆன்மிகம் நமது மிகப் பெரிய பலம்,பண்டைய காலங்களிலிருந்து ஆன்மீகமே நமது தேசத்தின் ஆன்மாவாகவும், நமது நாகரிகத்தின் அடித்தளமாகவும் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நெறிமுறைகள்அடிப்படையில் ஒரு லட்சிய வாழ்க்கையை நடத்த மக்களை வழிநடத்தும் கையேடுகளாக நமது வேதங்கள் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நுண்ணறிவுத் தீர்வுகளை வழங்குகிறது.

இந்தியா பக்தி பூமி, இந்தியர்களின் நாடி, நரம்புகளில் பக்தி பின்னிப் பிணைந்துள்ளது. இந்தியாவின் பல ரிஷிகள், முனிவர்கள் மற்றும் ஆச்சார்யர்கள், மதச்சார்பற்ற, உலகளாவிய வழிபாட்டு முறையின் மூலம் மக்களை உயர்த்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.