X

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீச்சு தாக்குதல் – தாக்கியவர் பற்றி தகவல் தந்தால் ரூ.2 லட்சம் பரிசு

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை பிரசாரத்தின் போது கல் வீசி தாக்கபட்டார். இதில் அவருக்கு கண் புருவத்திற்கு மேல் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 16 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து விஜயவாடா நகர போலீஸ் கமிஷனர் காந்தி ராணா கூறியதாவது:-

முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கல்லால் தாக்கப்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருட்டாக இருந்தது. 1480 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி இருந்தோம். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கண்காணிப்பு கேமரா காட்சிகள், வீடியோக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் படி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்லை வலுக்கட்டமாக வீசியதை கண்டறிந்துள்ளோம்.

முதல் மந்திரி மீது கல் வீசியவர்களை போலீசார் கைது செய்ய உதவும் வகையில் தகவல் அளிப்ப வர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும் அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.