ஆந்திர மருத்துவமனையில் இருந்து தப்ப முயன்ற கொரோனா நோயாளி
லண்டனில் இருந்து கடந்த 15-ந் தேதி ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவர்கள் அவரை ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதித்தனர். அவரது குடும்பத்தினரும் இதே ஆஸ்பத்திரியில் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மதியம் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோட முயன்றார்.
ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரை மீண்டும் பிடித்துக்கொண்டு வந்து சிறப்பு வார்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தனிமையில் இருப்பது தனக்கு பைத்தியம் பிடித்துவிடுமோ என பயமாக இருப்பதாக அந்த வாலிபர் பரிதாபமாக கண்ணீர் வடித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.