ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மம்பா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பாரதி, சங்கீதா, சீதா என்ற 3 பெண் மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் பல தாக்குதல்களை நடத்தியவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும், அவர்களிடம் இருந்து 2 கிலோ எடை கொண்ட நில கண்ணிவெடிகள் நிரப்பப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் 6 டெட்டனேட்டர்கள் உள்பட பல வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாரதியை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.4 லட்சமும், சங்கீதா மற்றும் சீதாவை பற்றி தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருந்தது.