X

ஆண் நண்பரை திருமணம் செய்துகொள்ளும் பிரபல கால்பந்து வீரர் – வைரலாகும் புகைப்படம்

ஆஸ்திரேலிய தொழில்முறை கால்பந்து வீரர் ஜோசுவா ஜான் கேவல்லோ. இவர் ஏ லீக் மென் கிளப் அடிலெய்டு யுனைடெட்டின் மத்திய மிட்பீல்டாராக விளையாடுகிறார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார். ஏனென்றால் இவர் தனது திருமணம் குறித்த தகவலை எக்ஸ் தள பதிவில் ஒரு புகைப்படத்துன் பதிவிட்டுள்ளார். அதில் யாருமே இல்லாத கிளப் அடிலெய்டு யுனைடெட் ஆடுகளத்தில் தனது வருங்கால பார்ட்னரிடம் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக முட்டிக்கால் போட்டு ப்ரபோஸ் செய்தார். உடனே லெய்டன் வெட்கத்துடன் முகத்தை மூடி கொண்டார்.

மேலும் என் வருங்கால மனைவியுடன் இந்த ஆண்டு தொடங்குகிறது. இந்த ஆச்சரியத்தை ஏற்படுத்த உதவிய அடிலெய்டு யுனைடெட் நிறுவனத்திற்கு நன்றி. உங்கள் முடிவில்லாத ஆதரவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் கால்பந்தில் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளீர்கள். இது சாத்தியம் என்று நான் கனவிலும் நினைக்காத ஒன்று. மேலும் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் உண்மையாக வாழ ஊக்குவித்தேன். இந்த சிறப்பு தருணத்தை ஆடுகளத்தில் பகிர்ந்து கொள்வது சரியாக இருந்தது.

இவ்வாறு எக்ஸ் தளத்தில் கூறினார்.

ஆண்கள் கால்பந்து வீரர்கள் மறைமுகமாக ஓரினசேர்க்கையாளராக இருந்த போதிலும் வெளிப்படையாக அறியப்பட்ட ஒரே ஓரினச்சேர்க்கையாளர் கேவல்லோ ஆவார்.