ஆட்ட நாயகன் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ் – குவியும் பாராட்டுகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ரன்னில் சுருண்டது. முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட் உள்பட 6 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில், இந்தியா 8-வது முறையாக ஆசிய கோப்பை வென்று சாம்பியன் ஆனது.

இந்நிலையில், 6 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. பரிசு பெற்ற சிராஜ், அந்தத் தொகையை கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக, சிராஜ் கூறுகையில், இந்த ரொக்கப் பரிசை மைதான வீரர்களுக்கு வழங்க விரும்புகிறேன். அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் என தெரிவித்தார். முகமது சிராஜின் இந்த செயலுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports