சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதரி தர்கா உள்ளது. இங்கு அனைத்து சமூக மக்களும் மத வேறுபாடு இன்றி வழிபடுவது வழக்கம். இந்த தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது. இதில் பங்கேற்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது காரில் வந்து இருந்தார். தர்காவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது ஏ.ஆர்.ரகுமானை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். ரோட்டிலும் திரண்டு நின்றனர். ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் முண்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் வந்த காரை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி வீட்டுக்கு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.