Tamilசெய்திகள்

ஆட்சியை பிடிக்க பா.ஜ.க எந்த நிலைக்கும் செல்லும் – குமாரசாமி ட்விட்டர் பதிவு

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

பெகாசஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசு சிக்கியுள்ளது. இது மனித உரிமை மீறல் என்ற போதிலும் மத்திய அரசு சமீபகாலமாக உளவு பார்க்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது. மத்தியில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது மற்றும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா பயன்படுத்திய ஆயுதங்களில் இந்த உளவு விவகாரமும் ஒன்று.

என்னை உளவு பார்த்த மத்திய அரசு, இறுதியில் என் மீது தொலைபேசி ஒட்டுகேட்பு புகாரை கூறியது. அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணையும் நடத்தப்பட்டது. இதன் மூலம் அக்கட்சி மனசாசட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா எந்த நிலைக்கும் செல்கிறது. இது அபாயகரமானது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களின் தனிப்பட்ட விஷயங்களை உளவு பார்த்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் பொதுமக்களின் தனிப்பட்ட விஷயங்களையும் பா.ஜனதா உளவு பார்க்கும். அந்த நாள் வெகுதூரம் இல்லை. பா.ஜனதாவின் இத்தகைய மோசமான நிலையை கண்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.