Tamilசெய்திகள்

ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

* மாறி வரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக்கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி வழங்கப்படும்.

* ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.

* உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும்.

* அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். ரூ.225 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.