ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 – ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை இல்லாத வரையில் அதிக வீரர்களை சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.88 மீட்டர் தூரமும், கிஷோர் ஜெனா 87.54 மீட்டர் தூரமும் ஈட்டியெறிந்து அசத்தினர். ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் துவக்கம் முதலே அதிகளவில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதுவரையில், இந்தியா 81 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 18 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் பதக்கங்கள் அடங்கும்.