ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ஜிதேந்தர் வெள்ளிப் பதக்கம் வென்றார்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் செயல்பட்ட இந்திய வீரர் ஜிதேந்தர் குமார் (74 கிலோ உடல் எடைப்பிரிவு) மங்கோலியா வீரர் ஜன்டான்புட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், ஒலிம்பிக் தகுதிசுற்று போட்டிக்கான இந்திய அணியிலும் இடத்தை உறுதி செய்தார். ஆனால் இறுதி ஆட்டத்தில் ஜிதேந்தர் 1-3 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் கஜகஸ்தானின் டேனியர் காசனோவிடம் தோற்றதால் வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. மற்ற இந்திய வீரர்களான தீபக் பூனியா (86 கிலோ), ராகுல் அவாரே (61 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கம் உள்பட 20 பதக்கங்களை குவித்து தனது சிறந்த ஆசிய சாம்பியன்ஷிப்பாக மாற்றி இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news