ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – பி.வி.சிந்து காலியிறுதிக்கு முன்னேறினார்
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை யூ ஹானுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், இந்தோனேசிய வீரர் வர்டயோவுடன் மோதினார். இதில் பிரனாய் 21-16, 5-21, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14- 21, 22-20, 9-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.