ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி – பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி
6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில்
5-3 என்னும் கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் 3-வது இடத்துக்கான போட்டி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இருப்பினும் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி பாகிஸ்தானின் வெற்றி கனவை தட்டிப்பறித்தனர். இதன்மூலம் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கல பதக்கத்துடன் 3-வது இடத்தை கைப்பற்றியது.