Tamilவிளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு – இந்திய வீராங்கனை பவானி தேவி வெண்கலப்பதக்கம் வென்றார்

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி சீனாவில் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. பின், 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை இத்தாலியில் நடைபெறுகிறது.

இதில் இந்தியாவிற்காக தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். சிறப்பாக விளையாடி காலிறுதியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை வீழ்த்தினார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் 14-15 என்ற புள்ளிக்கணக்கில் பவானி தோல்வியடைந்தார். இதன்மூலம் பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்திய வீராங்கனை ஒருவர் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.