X

ஆசிய கோப்பை ஹாக்கி – இந்தியா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றது

இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. இந்த சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த மலேசியா, ஜப்பான், கொரியா, இந்தியா சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. மீண்டும் ரவுண்டு ராபின் முறையில் நடந்த இந்த சுற்றின் கடைசி  ஆட்டத்தில் கொரியாவுடன் டிரா செய்த இந்தியா பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. மலேசியா, கொரியா, இந்தியா தலா 5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், கோல் வித்தியாச அடிப்படையில் மலேசியா, கொரியா பைனலுக்குள் நுழைந்தன.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியா 2-1 என்ற கோல் கனக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. மலேசியா வெள்ளிப் பதக்கம் பெற்றது.முன்னதாக, 3வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் மோதின. 6வது நிமிடத்திலேயே இந்திய வீரர் பால் ராஜ்குமார்  அதிரடியாக ஒரு கோல் அடித்து முன்னிலை  பெற்றுத் தந்தார். அதன் பிறகு நடந்த 54 நிமிட ஆட்டத்தில் கோல் ஏதும் விழாததால், இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 3வது இடம் பிடித்தது.