ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இந்தியா 19. 4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு148 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா தலா 35 ரன்னும், பாண்ட்யா 33 ரன்னும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது பாண்ட்யாவுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி சிறப்பான திறமையையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துகள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.