ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல குரூப் (இ பிரிவு) சுற்றில் வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அபாகானி லிமிடெட் டாக்கா (வங்காளதேசம்) அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-3 என்ற கோல் கணக்கில் அபாகானி லிமிடெட் டாக்கா அணியிடம் தோல்வி கண்டது. வங்காளதேச அணியில் கெர்வென்ஸ் பெல்போர்ட் 64-வது நிமிடத்திலும், மாசிக் சைஹானி 69-வது நிமிடத்திலும், மாமனுல் இஸ்லாம் 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சென்னையின் எப்.சி. அணியில் வினீத் 6-வது நிமிடத்திலும், ஐசக் வன்மால்சாவ் 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்கள். சென்னையின் எப்.சி. அணி தனது அடுத்த ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கவுகாத்தியில் ஜூன் 19-ந் தேதி நடக்கிறது.