X

ஆசிய குத்துச்சண்டை போட்டி – மேரிகோம் வெள்ளிப்பதக்கம் வென்றார்

ஆசிய குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை நசீமை எதிர்கொண்டார் மேரி கோம். அனுபவம் வாய்ந்த மேரி கோம் தன்னைவிட 11 வயது குறைவான வீராங்கனையை எதிர்கொண்டபோதிலும், நசீமே ஆதிக்கம் செலுத்தினார்.

மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் மேரி கோம் கடுமையாக முயற்சித்தும் நசீமை அவரால் வீழ்த்த முடியவில்லை. இறுதியில் 2-3 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார்.

இதன்மூலம், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் ஆசிய குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேரி கோம் அரையிறுதியில் மங்கோலிய வீராங்கனை லுட்சாய்கானை 4-1 என வீழ்த்தியிருந்தார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை தங்கப்பதக்கம் வென்ற மேரி கோமுக்கு இது 2-வது வெள்ளி பதக்கமாகும்.