Tamilவிளையாட்டு

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏசிசி தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். அதில் தற்போது ஜெய் ஷா 2-வது ஆண்டில் இருக்கிறார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவர் வங்காளதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசனுக்குப் பிறகு ஜனவரி 2021-ல் ஏசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஏற்றுக்கொண்டார். 2022-ல் ஷாவின் தலைமையின் கீழ், ஏசிசி ஆசிய கோப்பை டி20 போட்டியாகவும், 2023-ல் ஒருநாள் போட்டியாகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.