ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளு தூக்குதல் போட்டி – இந்தியாவின் சபர் ஜாய்ஷ்னா வெண்கலப் பதக்கம் வென்றார்
உத்தரப் பிரதேசம் மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத்தர் பல்கலைக்கழகத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் ஆசியாவைச் சேர்ந்த 18 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் 220 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதன்படி, நேற்று நடைபெற்ற ஆசிய இளைஞர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் ஜூனியர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சபர் ஜாய்ஷ்னா 40 கிலோ பெண்கள் இளையோர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் டெலோஸ் சாண்டோஸ், பிலிப்பைன்ஸின் போரஸ் எரோன் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க், மொத்த எடைப் பிரிவு என மூன்று பிரிவுகளில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.